மழையில் மிதக்கும் குமரி மக்களுக்கு அனுதாபங்கள்!! கமல் டுவிட்

சென்னை:

‘‘மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என கமல்ஹாசன் டுவிட்டரில் கூறி உள்ளார்.

தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் வெகுவாக பாதித்துள்ளது. இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.