சிரியா: கார் குண்டுவெடிப்பில் 3 சிறுவர்கள் உட்பட 18பேர் பலி

நேற்றுமுன் தினம் சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சிரியாவில் உள்ள அல் பஸ்யரா நகரில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அரசுப்படைகள் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுவர்கள் உயிரிழந்தது பரிதாபத்துக்குரியது.
syria
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காததால் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது சிரிய அரசு சந்தேகிக்கிறது. ஏற்கெனவே சிரிய அரசுப்படையை எதிர்த்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிரியா அதிபர் ஆசாத்திற்கும், சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த கிளர்ச்சியாளார்களுக்கும் இடையே 2012ல் இருந்து உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. சிரிய ராணுவம் அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வருகிறது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலையிட்டு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதுடன் அவர்களின் இருப்பிடங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் சமீப காலமாக உலக நாடுகளின் பார்வையை தன்பக்கம் திருப்பியுள்ளது.