சிரியாவில் பயங்கரம்: அரசு படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி

--

டமாஸ்கஸ்:

சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பொருட்டு அரசு படைகள் தீவிரமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.  இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிர தாக்குதல் காரணமாக, சிரியாவின்  டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிரியா அரசு அறிவித்துள்ளது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக இதுவரை 3 லட்சம் அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சகணக்கானோர்  நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிரான பயங்கவாதிகளை அரசு படையினர் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர். இன்று 4வது நாளாக பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள 6 இடங்களில் அரசு படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலின்போது, அரசு படையினர் வீசிய  குண்டுகள் பொதுமக்கள் பகுதிக்குள் விழுந்தது. இதன் காரணமாக டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் தற்போது நடந்து வரும் போர் தான் மிகவும் உக்கிரமானது என்று என கூறப்படுகிறது.