சிரியா: அமெரிக்கா மொபைல் ராக்கெட் ராக்குதல்!

 

சிரியா:

துருக்கி சிரியா எல்லையில் உள்ள  ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது  அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

2turkey

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிரியா- துருக்கி எல்லைப்பகுதிகளில் உள்ள ஐ.எஸ். இயக்கத்தினரை குறிவைத்து, அமெரிக்கா முதல்முறையாக ‘ஹிமார்ஸ்’ என்றழைக்கப்படுகிற ‘மொபைல் ராக்கெட்’ தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜோஷ் ஜாக்கியுஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஐ.எஸ். எதிர்ப்பு தூதர் பிரெட் மெக்குர்க் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “புதிய மொபைல் ராக்கெட்டுகளை கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இந்த ராக்கெட்டுகள் தொலைவில் உள்ள இலக்கையும் மிகத்துல்லியமாக தாக்கும் ஆற்றல் வாய்ந்தவை” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிரான அமெரிக்கா-துருக்கி ஒத்துழைப்பின் சமீபத்திய நடவடிக்கை இது” என கூறி உள்ளது.

அதே நேரத்தில் சேத விவரத்தை யாரும் வெளியிடவில்லை. ஆனால் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.

கார்ட்டூன் கேலரி