சிரியா,

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் சிரியாவின் வடமேற்கு பகுதியான இட்ளிப் பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரசாயன தாக்குதலை நடத்தி முகமது ஹசூரி

இதில் 87 பேர் பலியாயினர். ஏராளமானோர் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுடனர். இறந்தவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள்.

இந்த ரசாயண தாக்குதல் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த தாக்குதல்களை தங்கள் ராணுவத்தினர் நடத்தவில்ரலை என்று ஷ்யா மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இந்த கொடூரமான  ரசாயன தாக்குதல் நடத்தியது அந்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து,  அலெப்போ நகர் எம்.பியான  பேர்ஸ் செகாபி (Fares Shehabi)  என்பவர் சமூக வலைத்தளத்தில் அதுகுறித்த  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த  ரசாயன தாக்குதலை நடத்தியவர் முகமது ஹசூரி (Mohammed Hasouri) என்ற ராணுவ வீர்ர் என்று குறிப்பிட்டுள்ளது.

அவர்  தன்னுடைய உயர் அதிகாரியுடன் சேர்ந்து கை குலுக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படமும்,    தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக விமானத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சிரியா அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.