ராஜ்யசபா எம்.பி பதவி:  திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி போட்டி

சென்னை:

ராஜ்யசபாவுக்கு காலியாகும் எம்.பி பதவிகளுக்கு திமுக சார்பில்  செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்தியா முழுமையுமாக 15 மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தமிழகம் சார்பில் ஆறு இடத்துக்கான தேர்தல் நடக்கிறது.

இவர்களின் பதவி வரும் ஜுன் 29ல் காலியாகவிருக்கிறது.

அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸில் சுதர்சன நாச்சியப்பன், திமுகவில் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் பதவி காலம் முடிவடையப்போகிறது.

ஆர். எஸ். பாரதி - டி.கே. எஸ். இளங்கோவன்
ஆர். எஸ். பாரதி – டி.கே. எஸ். இளங்கோவன்

இந்த காலியிடங்களுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த பதவிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். ஒரு ராஜ்யசபா எம்பிக்கு, 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை. அந்த வகையில் 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள அதிமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி நிச்சயம் கிடைக்கும். 98 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள திமுகவுக்கு 2 பதவிகள் உறுதியாக கிடைக்கு்.

ஒருவேளை, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக ஜெயித்தால் 4 உறுப்பினர்களை அக்கட்சியால் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அமையும்.

இந்த நிலையில் திமுக வேட்பாளார்களாக  அக் கட்சியின் செய்தித்தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்தார் திமுக தலைவர் கருணாநிதி

 

கார்ட்டூன் கேலரி