தனிமரம்தான் த.மா.கா!  வாக்கு வங்கியே இல்லை!

தென்னந்தோப்பு சின்னத்தை ஜி.கே. வாசன் அறிமுகப்படுத்தியபோது
தென்னந்தோப்பு சின்னத்தை ஜி.கே. வாசன் அறிமுகப்படுத்தியபோது

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் தாமாகாவை உருவாக்கினார் ஜிகே வாசன்.

இந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றார். அங்கே கதவு சாத்தப்பட்ட நிலையில், ம.ந.கூ. – தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தார்.

தமாகாவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணியில் கணிசமான தொகுதிகளையும் பெற்றது. (26 இடங்கள்.)

ஆனால் இன்றைய வாக்கு எண்ணிக்கையில், தமாகாவுக்கு என்று வாக்கு வங்கி ஏதுமில்லை என்பது உறுதியாகிருக்கிறது.

இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில் அக் கட்சி பெற்ற ஓட்டு சதவிகிதம் மொத்தமே .6 % (புள்ளி ஆறு சதவிகிதம்) தான்.

அக்கட்சி வேட்பாளர்கள் மிகக் குறைந்த அளவிலான ஓட்டுக்களையே பெற்றுள்ளனர். சில தொகுதிகள் வருமாறு..

ராயபுரம் –   892

மயிலாப்பூர் –  415

காட்பாடி – 2088

அணைக்கட்டு – 1738

கிருஷ்ணகிரி – 1015

பர்கூர் – 1035

திருக்கோவிலூர் – 4025

சங்ககிரி – 5633

சேலம் (வடக்கு) – 2081

பெருந்துறை – 1618

மடத்துக்குளம் – 2066

முசிறி – 3681

இப்படி ஒராயிரம் முதல் ஐயாயிரம் வரையிலான வாக்குளையே பெற்றிருக்கிறார்கள் தமாகா வேட்பாளர்கள்.

இவர்களில் விதிவிலக்காக வாணியம்பாடி த.மா.கா. வேட்பாளர் ஜி. ஞானசேகரன் 19,141 ஓட்டுகளும், விளாத்தி குளம் கதிர்வேள் 14,359 ஓட்டுக்களும் பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து த.மா.காவை மீண்டும் ஜி.கே வாசன் துவக்கியபோது, காங்கிரஸின் வாக்கு வங்கியை அவர் தட்டிச்சென்றுவிட்டார் என்பதாக சிலர் கூறிவந்தனர். ஆனால் ஆக த.மா.காங்கிரஸுக்கோ, ஜி.கே. வாசனுக்கோ தனிப்பட்ட வாக்குவங்கி, செல்வாக்கு ஏதுமில்லை என்பதை இந்த சட்டமன்றத் தேர்தல் உறுதிப்படுத்தி உள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6.3 சதவிகித ஓட்டுக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.