டந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திரை அரங்குகள் மூடப்பட்டி ருக்கிறது. சினிமா ஷூட்டிங் மற்ற பணிகளுக்கு அனுமதி கொடுத்த அரசு சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி தரவில்லை.
திரை அரங்குகளை திறப்பது குறித்து மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பு வரும் 8ம் தேதி கலந்தாலோசனை கூட்டத்துக்கு வட இந்தியாவில் உள்ள0 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத் துள்ளது. தென்னிந்திய மாநில அமைப் புகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து திரைப்பட விநியோகஸ்தர் கள் சங்க கூட்டமைப்பு தலைவரும் திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட் டிருக்கிறார்.

அவர் கூறியிருப்ப தாவது:

மத்திய அரசுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பு சார்பாக மீண்டும் திரை அரங்கு களை திறப்பது குறித்து ஒரு கலந்தாலோ சனை கூட்டத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடத்த இருக்கிறார்கள். அதற்காக திரைப்பட உரிமையாளர்கள், திரைப்பட அதிபர்கள் சங்க நிர்வாகி களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.
வட இந்தியாவிலே இருக்கிற அமைப்பு களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவை ஒட்டு மொத்த மாக புறக்கணித்திருக்கிறார்கள். குறிப் பாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா. எங்கள் தென்னகத் திலே ஆண்டுக்கு 800 படங்களுக்கு மேற் பட்ட படங்களை வெளியிட்டுக் கொண்டி ருக்கிறோம். எங்களுக்கு அழைப்பு இல்லை. குறிப்பாக குறைவான படங் களை வெளியிடக்கூடிய குஜராத்திலே அந்த மாநிலத்தில் இரண்டு அமைப்பு களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் தென்னகத்தை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள். இதைப்பற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்ன நினைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
800ம் படங்கள் வெளியிடும் எங்கள் தென்னகத்தை புறக்கணிப்பது என்பது கண்டனத்துக்குரியது, வருத்தத்துக்குரியது. எங்களுடைய ஆதங்கத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்ட மைப்பு சார்பில் அதன் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.