சிம்புவுக்கு நல்ல பெண் அமைய அத்திவரதரிடம் வேண்டினேன் : டி ராஜேந்தர்

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க விருந்த மாநாடு படத்திலிருந்து சிம்பு விலக்கப்பட்டார். ஷூட்டிங் தொடங்கப்படாமலே மாநாடு படம் நிறுத்தப்பட்டது சிம்புவுக்கு கெட்ட பெயர் பெற்றுத் தந்துள்ளது.

சிம்பு படங்கள் தான் பிரச்சனை என்றால் காதலும் கல்யாணமும் கூட எப்போதும் பிரச்சனையாக உள்ளது. நயன்தாரா , ஹன்சிகா என பட்டியல் நீண்டு கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காஞ்சிவரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த டி ராஜேந்தர் சிம்பு கல்யாணம் பற்றி பேசியுள்ளார்.

சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அத்திவரதரிடம் வேண்டினேன். என் மகனுக்கு சாதாரண பெண் வேண்டுமென்றால் எங்கு வேண்டுமானாலும் தேடலாம். ஆனால் என்மகனுக்கு தகுந்த, குணத்தில் பொருந்தியபொருத்தமான பெண் வேண்டுமானால் அது அத்திவரதரால் தான் முடியும் அதனால் அவரிடம் வேண்டினேன் என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி