டி-சீரிஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்துக்கு பூட்டு….!

இந்தியாவில் கொரோன அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மே 17-ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

இதில் இந்தித் திரையுலகின் முன்னணி நிறுவனம டி-சீரிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார்

தொற்று இருப்பவருக்கு ஒழுங்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை ஏற்று எங்கள் அலுவலக கட்டிடத்தை முழுமையாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்துள்ளோம்.

நாங்கள் ஊரடங்கு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியுள்ளோம். அரசு சொன்னதைப் போல வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார் .