“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி..? தயாரிப்பாளர் டி.சிவா

கருunnamed-8ணையுடன் பார்க்கும் கண்கள், வசீகரமான முக லட்சணம், கம்பீர தோற்றம் இவை அனைத்திற்கும் மேலாக ஒரு உன்னதமான மனிதர் இவை அனைத்தும் தான் நடிகர் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் சிறப்பான குணங்கள். தமிழ்
திரையுலகிலும் சரி, தெலுங்கு திரையுலகிலும் சரி, இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தன்னுடைய திரைப்படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகையை சூடி வருவது தான் விஜய் ஆண்டனியின் தாரக மந்திரமாக இருக்கின்றது. அந்த வகையில் அவருடைய அடுத்த படமான ‘சைத்தான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை வானளவு உயர்த்தி வருவது மட்டுமின்றி அவர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது. 3.11.2016 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற சைத்தான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவே அதற்கு சிறந்த உதாரணம். தெலுங்கில் ‘பெத்தலுடு’ என்று தலைப்பிட பட்டிருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம் அந்த மாநிலத்தில் 600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் விமர்சையாக நடைபெற்ற ‘சைத்தான்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனரும் – தயாரிப்பாளருமான எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ் – ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’, தயாரிப்பாளர் டி சிவா – ‘அம்மா கிரியேஷன்ஸ்’, தயாரிப்பாளர் எஸ் ஆர் பாபு, தயாரிப்பாளர் ஷிபு தமீன், நடிகர் சிபிராஜ், இயக்குநர் ஜி என் ஆர் குமரவேல், இயக்குநர் சசி (பிச்சைக்காரன்), இயக்குநர் ஆனந்த் (இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் நிர்மல் குமார் (சலீம்), இயக்குநர் செந்தில் குமார் (வாய்மை), விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அனுபதி, காற்றகட்ட பிரசாத், சமூக ஆர்வலர் மனோஜ், ‘வின் வின் மீடியா’ வேணு கோபால், ‘5 ஸ்டார்’ கதிரேசன், ‘ஸ்ரீ கிரீன்’ சரவணன் மற்றும் ‘சைத்தான்’ படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி – ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’, ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ், புகழ்பெற்ற நடிகர் ஒய் ஜி மகேந்திரன், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கதாநாயகன் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கதாநாயகி அருந்ததி நாயர், கிட்டி கிருஷ்ணமூர்த்தி, மீரா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத், படத்தொகுப்பாளர் வீரா செந்தில் மற்றும் கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

unnamed-9

“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி. ‘தன் நம்பிக்கை’ என்னும் புத்தகமாக செயல்படும் அவரின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருப்பவர், அவருடைய துணைவியார் பாத்திமா விஜய் ஆண்டனி தான்….” என்று கூறினார் தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா

“விஜய் ஆண்டனி நடித்த நான் திரைப்படத்தை பார்த்த பிறகு, நான் அவருடைய ரசிகனாக ஆகிவிட்டேன். அவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு திரைப்படமும் என் மனதோடு ஒட்டி பயணிக்க கூடியதாக தான் இருக்கும்…. தற்போது அவருடைய ‘சைத்தான்’ அவதாரத்தை காண நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் இந்த சைத்தான் திரைப்படத்தோடு இணைந்திருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ‘சைத்தான்’ திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்….” என்று கூறினார் தயாரிப்பாளர் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ டி சிவா.
“விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள் எதிர்மறையாக இருந்தாலும், அந்த படங்களின் கதை களங்கள் யாவும் அவரை போலவே ரசிகர்களின் மனதை வெல்ல கூடியதாக தான் இருக்கும். தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அவர் ஹீரோவாக வலம் வருவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோல் தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் ஆனந்தம் கொள்கிறேன்…” என்று உற்சாகமாக கூறினார் இயக்குநர் – தயாரிப்பாளர் எஸ் ஏ சந்திரசேகர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: saithan, Saithan - Jayalakshmi Tamil Lyric Video | Vijay Antony, Saithan images, Saithan movie, Saithan movie live, Saithan movie review, Saithan pics, Saithan pictures, Saithan still, t shiva, t shiva images, t shiva photos, t shiva pics, t shiva stills
-=-