இந்தியில் ரீமேக் ஆகிறது உலகப் புகழ் பெற்ற ‘ரன் லோலா ரன்’….!

1998 ஆம் ஆண்டு வெளியான ஜெர்மன் திரைப்படம் ‘ரன் லோலா ரன்’. கால சுழற்சி (time loop) வகை திரைப்படமான இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ‘ரன் லோலா ரன்’ திரைப்படம் சோனி நிறுவனத்துடன் இணைந்து எல்லிப்ஸிஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்க ஆகாஷ் பாட்டியா இயக்க இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் டாப்ஸி, தாஹிர் ராஜ் பாஸின் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த அறிவிப்பை சோனி நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 29 ரிலீஸ் ஆகிறது.