ரியா, தனது வாழ்க்கையைக் கசப்புடன் எதிர்கொள்ளக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன் : டாப்ஸி

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சுஷாந்தின் காதலி ரியா உள்ளிட்ட ஐவரும் அடக்கம்.

இதனிடையே, நேற்று (அக்டோபர் 7) ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ரியா அடுத்த 10 நாட்களுக்கு அவர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ரியா ஜெயிலில் இருந்த காலம், வெளியே சுஷாந்துக்கு நீதி கேட்கிறோம் என்ற பெயரில் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டவர்களின் ஈகோவுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இனி ரியா, தனது வாழ்க்கையைக் கசப்புடன் எதிர்கொள்ளக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். வாழ்க்கை நியாயமற்றதுதான். ஆனால், அது இன்னும் முடிந்து விடவில்லை.” என பதிவிட்டுள்ளார் .