சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பேச்சரா. இதன் ட்ரைலர் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தில் பேச்சரா படத்தின் முதல் பாடலான டைட்டில் ட்ராக் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இந்த பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தாரே கின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

மோஹித் செளஹான் மற்றும் ஷ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளார். வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். ஜுலை 24-ம் தேதி நேரடியாக தனது OTTதளத்தில் வெளியிடுகிறது டிஸ்னி ஹாட்ஸ்டார்.