கலாச்சார காவலர்கள் உஷார் – உ.பி முதலமைச்சர்  எச்சரிக்கை

லக்னோ,

தவறாக நடந்துகொள்ளும் பசு பாதுகாவலர்கள் மீதும், கலாச்சார காவலர்கள் மீதும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் லக்னோவில் இனறு முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையில்  தலைமைச் செயலர் ராகுல்பாட்நகர், முதன்மைச் செயலர் தெபாசிஸ் பாண்டா , காவல்துறை தலைவர் ஜாவீத் முகம்மது முதலான உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், நட்புரீதியில் பேசிக் கொண்டிருக்கும் இளைஞர்களிடத்திலும்,  இளம் பெண்களிடத்திலும் போலீசார் கடுமையாக  நடந்துகொள்வதாக தகவல் வந்துள்ளதாக கூறினார். அது உண்மையெனில் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேபோல்  இறைச்சிக் கூடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் நடக்காதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறை தலைவர் ஜாவீத் முகம்மதுவிடம் அவர்  அறிவுறுத்தினார்.