பணமதிப்பிழப்பு

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. “”இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்.”” – பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் …..

வறுமை காரணமாக கருமுட்டைகளை விற்கும் தமிழகப் பெண்கள்

நாமக்கல் கடும் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக விசைத்தறிகளில் பணி புரியும் தமிழக ஏழைப் பெண்கள் கருமுட்டைகளை விற்கும் நிலைக்கு…

பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் பெண்கள் கருமுட்டையை விற்கும் அவலம்! ஸ்டாலின் வேதனை

சென்னை: மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தமிழக அரசின் டாஸ்மாக் போன்றவற்றால் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள் தங்களது கருமுட்டையை…

பண மதிப்பிழப்பின்போது சசிகலா ரூ.168கோடிக்கு சொத்து வாங்கினார்! உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தகவல்

சென்னை: நாடு முழுவதும் கடந்த 2106ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவித்தபோது, தன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு முறைகேடாக பினாமி…

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் சுற்றுலா பயணி: இரண்டரை லட்சம் அபராதம்

கொச்சி: பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் நாட்டு பெண்ணுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில…

டிச.21ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற வதந்தி: ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் சிறுநிறுவனங்கள்

டெல்லி: 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற வதந்தியால் சிறுவணிகர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை…

தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடையும்  : அமித்ஷாவிடம் தெரிவித்த உர்ஜித் படேல்

டில்லி கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் ஜெட்லியிடம் தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடையும் என உர்ஜித்…

பொருளாதாரத்தை சீரழித்த பணமதிப்பிழப்பு: பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: கெட்டதை( ஊழலை) ஒழிப்பதற்காக என்று கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தி விட்டது என்று காங்கிரஸ் தலைவர்…

ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பு தாமதம் : தொடரும் பணத் தட்டுப்பாடு

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் அதன் விளைவான பணத் தட்டுப்பாடு இன்னும் தொடர்வதாகப் பொருளாதார நிபுணர்கள்…

பணமதிப்பிழப்புக்குப் பிறகு ஒரே வருடத்தில்  உள்நாட்டு ரொக்கப் பண இருப்பு அதிகரிப்பு

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இருந்து மக்களிடம் ரொக்க பண இருப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2016 ஆம்…

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் கேரளாவில் அழிந்துபோன சிறு தொழில்கள்: வெளிமாநில தொழிலாளர்கள் தவிப்பு

பெரும்பாவூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…

You may have missed