அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம். பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் மருவி பெண்ணாடம் ஆனது. பெண் என்பது தேவகன்னியர்களைக் குறிக்கும். ஆ என்பது காமதேனுவைக் குறிக்கும். கடம் என்பது வெள்ளை யானையைக் குறிக்கும். இந்த மூவரும் வணங்கிய திருத்தலம் பெண்ணாடம். நாவுக்கரசர் மற்றும் ஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலம் பெண்ணாடம். திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் இடபக் குறி – திரிசூல முத்திரை பதித்த திருத்தலம் பெண்ணாடம். அறுபத்து மூவரில், கலிக்கம்ப நாயனாரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவ பெருமான் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். சந்தானக் குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். …