சென்னை:

வசரத் தேவைக்காக, சென்னையில் இருந்து  வெளியூர் செல்பவர்கள், சென்னை காவல்துறை யில் அனுமதி பெற்று செல்லலாம் என தமிழகஅரசு அறிவித்த நிலையில், மற்ற மாவட்டங்களில் இருந்து செல்வோரும் யாரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற விவரத்தை அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்ல விரும்பினார், அரசிடம் அனுமதி பெற்றுச் செல்லாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  மருத்துவ அவசரநிலை, இறப்பு மற்றும் திருமணம் ஆகிய மூன்று காரணங்களில் மட்டுமே அவசரகால பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், காவல்ஆணையர் அலுவலகம் அவசர கால பாஸ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல மற்ற மாவட்டங்களில், ஒரு மாவட்டத்திற்குள், ஓரிடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல, அந்த பகுதியைச் சேர்ந்த தாசில்தார்கள் மற்றும் மண்டல அதிகாரிகள் பாஸ் வழங்க அங்கீகாரம் பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான மாவட்டஆட்சியர்கள், ஆணையர்களும் பாஸ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.