புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு மியான்மர் எல்லையில், அரசு வாகனத்தில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கு, அம்மாநில முதல்வரின் வீரதீர செயல்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆகஸ்ட் 13ம் தேதி, தேசப்பற்றாளர்கள் தினத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கான வீரதீர செயல் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், இந்து விருதைப் பெற்ற காவல்துறை அதிகாரிகளுள் ஒருவர், கடந்த 2013ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தலில் பிடிபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தற்போது சர்ச்ச‍ையைக் கிளப்பியுள்ளது. இதனை கையில் எடுத்துள்ள அகில மணிப்பூர் மாணவர்கள் யூனியன்(ஏஎம்எஸ்யூ). இந்நிலையில், கடந்த காலங்களில், இந்த வீரதீர விருதுகள் பெற்ற காவல்துறையினர் அனைவர் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

மணிப்பூரில் தற்போது, போதைப் பொருள் கடத்தலை ஒழிப்போம் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா ஆள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.