தைவான் : ரெயில் தடம் புரண்டு 18 பேர் மரணம்

டைடூங்

தைவான் நாட்டில் ஒரு ரெயில் தடம் புரண்டதில் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சீன நாட்டின் ஒரு பகுதியாக இருந்து தற்போது தனியாக செயல்படும் தைவான் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் டைடூங் நகரை நோக்கி ஒரு பயணிகள் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த ரெயிலில் சுமார் 300 பேர்களுக்கு மேல் பயணம் செய்துக் கொண்டுந்தனர்.

அந்த ரெயில் சீன நேரப்படி இன்று மாலை சுமார் 4.50 மணிக்கு திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் 18 பேர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அத்துடன் 180 பேர் வரை காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் மோசமான நிலையில் உள்ளதால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து தகவல் அறிய அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.