ஆக்ரா:

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதியஜனதா ஆட்சி அமைந்தபிறகு சிறுபான்மை யினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது உலக அதியசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலை உ..பி. மாநில அரசு, மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கி  உத்தரவிட்டுள்ளது.

உ.பி. மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ள சுற்றுலாத்தலம் குறித்த பட்டியலில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

உ.பி. பாரதியஜனதா அரசின் இந்த நடவடிக்கை  உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்துள்ள உ.பி. மாநில அரசு, இந்திய கலாச்சாரத்தின் படி இந்த கட்டடம் கட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.