ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலமான தாஜ்மஹால், சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட உள்ளது. அத்துடன், பார்வையாளர்களுக்கு  பல்வேறு கட்டுப்பாடு களும் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்கள்,  மார்ச் 17 ந்தேதி முதல் மூடப்பட்டன. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்தலமான தாஜ்மகாலும் இன்று மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஆக்ரா கோட்டையும் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும்  பின்பற்றப்பட வேண்டும்,  சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவையும் கடைபிடிக்க வேண்டும் என்று  இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தெரிவித்து உள்ளது.

மேலும், தாஜ்மஹாலில்  நாள் ஒன்றுக்கு  5,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதி,  முற்பகல் 2500 பேரும், 2500 பேருக்கும் அனுமதி,  ஆக்ரா கோட்டையில், தினமும் 2,500 சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலாப்பயணிகள், தாஜ்மகாலை பார்வையிட முன்கூட்டியே முன்அனுமதி பெற வேண்டும் என்றும்,   ஆன்லைனில் டிக்கெட் வாங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.