டிரம்ப் வருகைக்காக தாஜ்மகால் கல்லறைகள் சுத்தம்: 300 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்காக 300 ஆண்டுகளில் முதல் முறையாக தாஜ்மஹாலின் கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன.

சேரிகளை மறைக்க அகமதாபாத்தில் ஒரு சுவரை எழுப்பிய பின்னர், அதே அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகைக்கு முன்னதாக இந்தியா இப்படியான  திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.

தாஜ்மகாலின் இரண்டு கல்லறைகளும், களிமண் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட பின்னர் கல்லறைகளின் பிரதிகள் சுத்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

களிமண்ணை மிக அடர்த்தியாக பூசி பின்னர் வடிகட்டிய நீரில் கழுவுவதாகும். அதன்படி 5 முறை சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு வந்துள்ள டிரம்ப், தாஜ்மகாலில் உள்ள உண்மையான கல்லறையை காணப்போவது இல்லை.

காரணம், நுழைவுவாயில் 5 அடி உயரத்தில் இருப்பதே இதற்கு காரணம். அண்மையில் தாஜ்மகாலுக்கு வந்த டிரம்ப் பாதுகாப்புக் குழு, 17ம் நூற்றாண்டின் கல்லறையை பார்த்தாலும், அதை குனிந்து பார்க்க மாட்டார் என்று தெரிவித்திருந்தது.

தாஜ்மகாலில் உள்ள கல்லறைகள், ஷாஜகான் நினைவு தினம் உள்ளிட்ட 3 நாட்கள் மட்டுமே பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும். கல்லறைகளுக்கு மேலே உள்ள சரவிளக்கையும் புளி கலந்த நீரில் சுத்தம் செய்யப்படுகிறது.

சுவர்கள், தளங்களில் உள்ள தூசிகள், கறைகளை அகற்ற இந்த நடவடிக்கையை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் செயல்படுத்துகிறது.