தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு : அதிர்ச்சியில் பயணிகள்

க்ரா

லக அதிசயமான தாஜ்மகால் நுழைவுக்கட்டணம் ரூ.50லிருந்து ரூ.250 ஆக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.  கடந்த 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் உ. பி. மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது.    தனது மனைவி தாஜ்மகால் நினைவாக முகலாய மன்னன் ஷாஹகான்  கட்டிய இந்த கட்டிடத்தில் இருவர் சமாதியும் உள்ளன.   தாஜ்மகாலை காண உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.

அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இந்த கட்டிடம் மாசடைவதாக புகார்கள் எழுந்தன.   அதனால் இந்த கட்டிடத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.    அதனால் தாஜ்மகாலை காணவரும் பயணிகளின் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்ணாகர் அறிவித்துள்ளார்.

வசந்த் ஸ்வர்ணாகர், “தாஜ்மகாலை காண இதுவரை ரூ.50 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.   இனி அந்த கட்டிடத்தை முழுவதுமாக உள்ளே சென்று பார்க்க ரூ. 250 கட்டணம் செலுத்த வேண்டும்.  ரூ.50 கட்டணம் செலுத்துபவர்கள் கட்டிடத்தின் அருகே சென்று பார்க்க முடியும்.   ஆனால் உள்ளே செல்ல முடியாது.

இதே போல் வெளிநாட்டுப் பயணிகளின் நுழைவுக் கட்டன ரூ.1300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.    சார்க் நாட்டை சேர்ந்த பயணிகளுக்கான கட்டணமும் ரூ. 540 ஆக இருந்தது ரூ. 740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது” என தெரிவித்துள்ளார்.