வாஷிங்டன்:

உலகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்களில் தாஜ் மஹால் 6வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 68 நாடுகளில் உள்ள 759 இடங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதி கம்போடியா அங்கோர் வாட் கோவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

2வது இடத்தை ஸ்பெயின் பிளாசா டி எஸ்பனாவும், 3வது இடத்தை அபுதாபி ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன. 6வது இடத்தை தாஜ் மஹால் பிடித்துள்ளது. ஆசிய அளவில் 2வது இடத்தை தாஜ் மஹாலும், 9வது இடத்தை ராஜஸ்தான் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையும், 10வது இடத்தை பஞ்சாப் பொற்கோவிலும் பிடித்துள்ளன.