உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்! டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் டிவிட்

சென்னை: உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் என்று ரஜினியின் அரசியல் அறிவிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் டிவிட் பதிவிட் டு உள்ளார்.

அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக அலப்பறை செய்து வந்த ரஜினி, இன்று அரசியலுக்கு வரவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இந்த விவகாரத்தில், அவர் மக்கள் சார்ந்து நிற்காமல்,  அவரது சுயநலமே மேலோங்கி இருக்கிறது.

இந்த நிலையில், ரஜினி கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டபோது,  டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்,  “ வா தலைவா வா” என்று வரவேற்றவர்,  தற்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்ற முடிவுக்கு “தலைவா டோன்ட் ஃபீல்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “தலைவா … Pls மோசமாக உணர வேண்டாம். உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா . உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்” என்று பதிவிட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளார்.