பிராமண சமூகத்தில் பிறப்பது எய்ட்ஸ் விட மோசமாகி விட்டது : நடிகை ஆதங்கம்

சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ள படம் அருவி.   ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.   இந்தப் படத்தில் ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியை கேலியான விமர்சனங்கள் செய்யப்பட்டு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.   இது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில், “ ஊடகத்தில் உள்ள வெளிப்படையாக பேசும்  ஒரு பெண் பிராமண சமூகத்தில் பிறந்து அதிலும் அவர் பாலக்காட்டு ஐயர் உச்சரிப்புடன் தமிழ் பேசி இந்த தமிழ்நாட்டில் வாழ்வது எய்ட்ஸ் பாதிப்பை விட மோசமாகி விட்டது.   இந்த மாதிரியான ஒரு வைரஸ் பற்றி யாரும் ஏன் படம் எடுக்கவில்லை?  இப்படி பெண்களை இழிவு படுத்துபவர்களை நாடு கடத்தினால் என்ன?”  என தன் ஆதங்கத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.