வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து சென்ற ’தல’ தோனி

அயர்லாந்திற்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய வீரர்களுக்கு முன்னாள் இந்திய கேப்டன் தோனி தண்ணீர் எடுத்து சென்ற காட்சியை சமூக வளைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி- 20 தொடரில் பங்கேற்றது. வெள்ளிக்கிழமை அயர்லாந்துக்கு எதிரான டி-20 போட்டி டப்லின் நகரில் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் 76 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இரண்டாவது போட்டியில் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார்.
dhoni
போட்டியின் முதலில் 4விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 213 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 70ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி டி- 20 போட்டிகளில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

நம்ம நல தோனியின் செயல்:

போட்டியின் நடுவே இந்திய வீரர்களுக்கு தோனி தண்ணீர் எடுத்து சென்றார். அணியின் இளம் வீரரகள் தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வார்கள். மாறாக நேற்றைய போட்டியில் தோனி நடந்துக்கொண்ட விதம் உலகில் உள்ள அனைவரையும் நெகிழச்செய்ததுடன் அவரது நல்ல மனதை பாராட்டினர்.