தலிபான் : புதிய தலைவர் தேர்வு

ஸ்லாமாபாத்

யங்கரவாத இயக்கமான தலிபானுக்கு புதிய தலைவராக முப்தி நூர்வலி மெஹ்சுத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்களில் தலிபான் ஒன்றாகும்.    இவ்வியக்கம் பல்வேறு சட்டவிரோத செயல்களை நடத்தி வருகிறது.    இந்த இயக்கத்தின் தலைவராக இருந்தவர் முல்லா ஃபஷ்னுல்லா.   பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபட்ட மலாலாவைக் கொல்ல இவர் முன்பு உத்தரவிட்டிருந்தது தெரிந்ததே

ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாவட்டத்தில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியது.   அந்த தாக்குதலில் முல்லா ஃபஷ்னுல்லா கொல்லப்பட்டார்.   அதனால் புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது குரசானி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   அந்த அறிவிப்பில், “தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக முப்தி நூர்வலி மெஹ்சுத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    இந்த இயக்கத்தின் துணைத் தலைவர்களாக முப்தி மசீம், அகா முப்தி ஹ்ஃப்ஜுல்லா ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என் தெரிவிக்கப்பட்டுள்ளது.