சிர்ஷா:

என் தந்தை ராஜீகாந்தியையும் என்னையும் விமர்சியுங்கள். அதேசமயம் ரஃபேல் முறைகேட்டுக்கும் பதில் சொல்லுங்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


ஹரியானா மாநிலம் சிர்ஷாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, என்னைப் பற்றியும் என் தந்தையைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்.
அதேசமயம், ரஃபேல் விவகாரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் விளக்குங்கள்.

ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று சொன்னீர்கள். அதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்.

விவசாய உற்பத்திக்கு சரியான விலை கொடுத்தீர்களா? தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றீர்களே, போட்டீர்களா?

ரஃபேல் விவகாரத்தில் தனது தொழிலதிபர் நண்பருக்கு சாதகமாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் விவசாயிகள் பிரச்சினை பற்றியும் வேலை வாய்ப்பின்மை பற்றியும் பிரதமர் மோடி பேசவில்லை.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின்படி, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாய கடனை ரத்து செய்துள்ளோம்.

எப்போதும் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை நாடு சந்தித்துள்ளது. இதுதான் மோடியின் சாதனை.

மேக் இன் இந்தியா என்று தொடங்கியவர் பக்கோடாவில் முடித்தார். பிரதமர் மோடி நாடு முழுவதும் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார்.