மேகதாது அணை குறித்து பேச்சு வார்த்தை? நிதின் கட்கரி மறுப்பு

டில்லி:

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக  பேச்சுவார்த்தைக்கு யாரையும் அழைக்கவில்லை, தமிழக முதல்வருக்கு கடிதமும் எழுதவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கி உள்ள விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக  பாராளு மன்றத்தின் இரு அவைகளும் தமிழக எம்.பி.க்களால் முடக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது.  தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களிடையே சமரசம்  ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. தமிழக முதல்வருக்கும் நிதின்கட்கரி கடிதம் எழுதி உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. .

மேகதாது அணை விவகாரம் நிதின் கட்கரி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்று  நிதின்கட்கரி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Edappadi palanisamy, karnataka, Kumarasamy, Mekedatu Dam issue, Union Minister Nitin Gadkari, கர்நாடகா, குமாரசாமி, சமரசம், தமிழ்நாடு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
-=-