1991 – 1996ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் ஒன்றான சுடுகாட்டு ஊழலை நோண்டி நொங்கெடுத்து குற்றவாளியான செல்வகணபதி தண்டனை பெற காரணமாக இருந்தவர் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.
தனது நேர்மையான நடவடிக்கைக்காக பேசப்பட்டவர். ஆனால் கடந்தசில வருடங்களாக, “அதீத கடவுள் பக்தியால்” பேசப்படுகிறார்.
ர்.
 

 உமா சங்கர்
உமா சங்கர்

இவரது பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பின. இதற்கிடையே  கடந்த வருடம் ஜனவரி மாதம், கன்னியாகுமரியில் மத பிரசாரத்துக்கு இவர் சென்ற போது, இவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அரசு அலுவலரான இவர்  மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு நோட்டீஸும் அனுப்பியது. அதை இவர் பொருட்படுத்தவில்லை.
நாளுக்கு நாள் பக்தி அதிகமாகி, “ஏசுவை நான் பார்க்கிறேன்.. ஏசுவிடம் நான் பேசுகிறேன்” என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்.
அது இப்போது இன்னும் ஓவராகி, ட்விட்டர் வரை வந்துவிட்டது.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  எழுதியதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் வாட்ஸ் அப்களில் வலம் வருகிறது.
 
13522039_1306840279345722_1379844896784142700_n
 
அதில்..
 
“ஏசுவிடம் பேசி, பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தவன் நானே!”
“இன்று மாலை நான்கு மணிக்கு, நான் – எனது நண்பன் –  ஏசு, மூவரும் கான்ப்ரன்ஸ் கால் போட்டுப் பேசப்போகிறோம்..!”
“மொபைலில் இன்று பேலன்ஸ் இல்லாததால் ஏசு இன்று எஸ்.எம்.எஸ். செய்துள்ளார்..”
என்று இருக்கிறது.
அதே நேரம், “குறிப்பிட்ட இந்த ஸ்கிரீன் ஷாட் இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது. உமாசங்கரை கேலி செய்வதற்காக இப்படி போலியாக உலவ விட்டிருக்கிறார்கள்” என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால்  இதைவிட “அதிகமாக” பிரசங்கக் கூட்டங்களில் பேசியவர்தான் உமாசங்கர்.
“ஏசுவிடம் தினமும் நான் நேரடியாக பேசுகிறேன்” என்று பிரசங்கக் கூட்டங்களில்  பல முறை பேசியிருக்கிறார்.  அது மட்டுமல்ல,  “இன்னும் சில காலத்தில் உலகம் அழியப்போகறது.. “ “சுனாமி வந்து இந்துக்களுக்கு பாடம் புகட்டும்” என்றெல்லாம் அதிரடியாகப் பேசியிருக்கிறார்.
உமாசங்கர் பேச்சும் அதீதம்தான். அதை பயன்படுத்தி போலியாக ஸ்கிரீன் ஷாட் உருவாக்கி அவர் பெயரில் உலவவிடுவதும் தவறுதான்.
வேறென்ன சொல்வது?