சிஸ்டம் பத்தி பேசற ரஜினி இப்படி செய்யலாமா? ரவுண்ட்ஸ்பாய்:

ஷங்கர் இயக்கத்துல 2.0, பா.இரஞ்சித் இயக்கத்துல காலா.. ரெண்டு படங்களும் வெளியாக தயாரா இருக்கு. இந்த நிலையில அடுத்தபட அறிவிப்பு வெளியாகி இருக்கு. பீட்சா, ஜிகர்தண்டா, இறைவின்னு தரமான வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்தான் இந்த புதிய படத்தை இயக்குகிறாரு. கேக்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

 

நம்ம நண்பன் கோயிந்துகிட்ட இது பத்தி சொல்லி சந்தோசப்பட்டேன். அவனோ, “இது சரிதானா”னு கேட்டான். “என்னடா சொல்றே”னு கேட்டேன். அதுக்கு அவன், “ரஜினி பட அறிவிப்பு சந்தோசம்தான். ஆனா படத்தை தயாரிக்கிறவரை பார்க்கறப்போதான் பீதியாவுது”ன்னு சொன்னான்.

அதுக்கு நானு, “சன் டிவி கலாநிதியோட சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்குது. அதுல உனக்கேன் பீதியாவுது”னு கேட்டேன். அவன், “சிஸ்டம் சரியில்லே சிஸ்டம் சரியில்லேன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றாரு ரஜினி. அதுவும் தமிழ்நாட்டுலதான் சிஸ்டம் கெட்டுக்கிடக்கு,

இங்கதான் முதல்ல மாத்தணும்னு சொல்றாரு. சன் பிக்சர்ஸ் கலாநிதி மேல பல்வேறு புகாருங்க இருக்கு. குறிப்பா, பி.எஸ்.என்.எல். தொலைபேசியோட அதிவேக இணைப்பை சன் குழுமத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு 1.76 கோடி இழப்பு ஏற்படுத்தினாருன்னு வழக்கு இருக்கு.

இப்படி தப்பா சிஸ்டத்தை பயன்படுத்தி மக்கள் பணத்தை பயன்படுத்தியவங்க தயாரிப்புல.. சிஸ்டம் பத்தி பேசற ரஜினி நடிக்கலாமா”னு கேட்டான். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: talking about system and Rajini shall doi like this? rondsboy, சிஸ்டம் பத்தி பேசற ரஜினி இப்படி செய்யலாமா? ரவுண்ட்ஸ்பாய்:
-=-