ரூ.200 கோடி பட்ஜெட்டில் , ஆந்திரா சூப் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சரித்திர பின்னணியில் உருவாகும் படம் ‘ரைசா நரசிம்ம ரெட்டி’.

இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் தமன்னாவும் ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனம் ஆடுகிறார் என தகவல் கசிந்துள்ளது.

ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதை தவிர்த்து வந்த தமன்னா, ரூ.200 கோடியில் பிரம்மாண்டபடமாக உருவாவதாலும், சிரஞ்சீவிக்காகவும் தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்ததாக கூறப்படுகிறது.