“அப்படி என்னை கூப்பிடாதீங்க” – ரசிகர்களுக்கு தமன்னா கட்டளை…

 

தங்களுக்கு பிடித்த சினிமா நட்சத்திரங்களுக்கு, அவர்களின் அபிமான ரசிகர்கள் செல்லப்பெயர் வைத்து அழைப்பது உண்டு.

நட்சத்திரங்களின் பிறந்தநாளின் போது, போஸ்டர்களில் அந்த பட்டப்பெயரை போட்டு, அவர்கள் கொண்டாடுவது வழக்கம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவை ‘மில்க்கி பியூட்டி’ (பால்நிற அழகி) என அவரது ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள்.

ஆனால் தமன்னா “என்னை ‘மில்க்கி பியூட்டி’ என அழைக்க வேண்டாம்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.

“ஒருவரது உடம்பின் கலரை வைத்து அவருக்கு செல்லப்பெயர் வைப்பது நல்ல பழக்கம் அல்ல. இந்தியாவில் பலர் ‘நாம் வெள்ளையாக இல்லேயே’ என ஏக்கம் கொள்வது உண்மை.

ஒருவரது திறனை வைத்து அவருக்கு செல்லப்பெயர் சூட்டுங்கள். கலரை வைத்து வேண்டாம். இனிமேல் யாரும் என்னை ‘மில்க்கி பியூட்டி’ என கூப்பிடாதீங்க” என வேண்டுகோள் விடுத்துள்ளார், தமன்னா.

– பா. பாரதி