‘மில்க்கி பியூட்டி’ என்று அழைக்கப்படும் நடிகை தமன்னாவுக்கு நேற்று 31 -வது பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளை அவர் ஐதராபாத்தில் கொண்டாடினார்.

கபடி பயிற்சியாளராக தமன்னா நடிக்கும் தெலுங்கு படம் ‘சீட்டி மார்’. இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் ‘கேக்’ வெட்டி தனது பிறந்த நாளை கொண்ட்டாடியுள்ளார்.

அந்த படத்தின் கதாநாயகன் கோபிசந்த் உள்ளிட்ட படக்குழுவினர், தமன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சம்பத் நந்தி இயக்கும் இந்த தெலுங்கு படம் கபடி விளையாட்டை கதைக்களமாக கொண்டதாகும்.

தமன்னாவுக்கு நடிகைகள் காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், சமந்தா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து தங்கள் வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

– பா. பாரதி