தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர் தமன்னா. இவரை பற்றி அடிக்கடி திருமண வதந்தி வந்த வண்ணமாக இருக்கும். ஆனால் அவை அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு துபாயில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்குடன எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமன்னாவிற்கும் அப்துல் ரஸாக்குக்கும் காதல் என செய்தி வேகமாக பரவி வருகிறது. ஆனால் ஏனோ தமன்னா இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமலேயே இருக்கிறார்.
ஒரு முறை கிரிக்கெட் வீரர், அடுத்த முறை நடிகர், அடுத்த முறை டாக்டர் என்று யாராவது ஒருவருடன் சேர்த்து பேசுகிறார்கள் என தமன்னா முன்பு வேதனை தெரிவித்தார். முன்னதாக தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.