சின்மயி ஒரு அய்யங்கார் “… ” : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் ஆபாசமாக பேசியதாக அதிர்ச்சி ஆடியோ

பாடகி சின்மயியால் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்)  தலைவர் நாராயணன், சின்மயியை ஆபாசமாக பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீ டூ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் சமூகவலைதளத்தில், பெண்கள் பலர், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.  சமீபத்தில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, ராதாரவி, கர்நாடக இசைக்கலைஞர்கள் டி.என். சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றம் சுமத்தி திரைப்பாடகி சின்மயி பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) தலைவர் நாராயணன் மீதும் பாலியல் புகார் கூறி ட்விட்டரில் பதிவிட்டார். இதை நாராயணன் மறுத்தார்.

இந்த நிலையில்,  அந்தணர் முன்னேற்றக் கழக தலைவரும், தாம்ப்ராஸ் உறுப்பினருமான ஜெயப்பிரகாஷ் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், “தாம்ப்ராஸ் தலைவர் நாராயணனை திண்டுக்கல் மாவட்ட தாம்பிராஸ் தலைவர் ஹரிஹரமுத்து  தொடர்புகொண்டு, சின்மயி புகார் குறித்து பேசினார். அதற்கு ஆத்திரமான நாராயணன், சின்மயி அய்யங்கார் தே… என்றும் தன்னை சந்திக்க நிர்வாகிகளுக்கு நேரம்தரமுடியாது மனுவைபெறமுடியாது இவ்விசயம் தொடர்ந்தால் சங்கத்தில் இருந்துநீக்குவேன் என்றும் தான் தலைவர் பதவியை ராஜீனாமா செய்யாமாட்டேன் என்றும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் பேசினார்” என்றும் பதிவிட்டுள்ளார்.

“குற்றச்சாட்டை முன் வைத்தார் என்ற ஒன்றை காரணத்திற்காக ஓரு பெண்ணை
தரக்குறைவாக விமர்சித்திருப்பது எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று நாராயணனுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

ஹரி ஹரமுத்துவிடம் நாராயணன் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ: