பாலியல் தொல்லைகளால் திரைத்துறையின் பெயர் கெடுகிறது!: நடிகை சமந்தா ஆதங்கம்

பாலியல் தொல்லைகளால் திரைத்துறையின் பெயர் கெடுகிறது என்று நடிகை சமந்தா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல நடிகைகள் திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் நடப்பாதக கருத்து தெரிவித்து வரும் நிலையில் சமந்தாவும் இது குறத்து பேசியிருக்கிறார்.

மதுரையில் நேற்று (திங்கட்கிழமை)  நடந்த தனியார் கைபேசி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் அவர் கொண்டார். அவரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். சிறிது நேரம் ரசிர்களுடன் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டார் சமந்தா.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் தீர்மானிக்கின்றனர். எனக்கு மதுரை மக்களின் பாசம் மிகவும் பிடிக்கும்.” என்று தெரிவித்தார்.

அப்போது, நடிகைகள் ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ மற்றும் கங்கனா என பலர் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பற்றி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சமந்தா, “நான் பத்து வருடங்களாக திரைத்துறையில்  இருக்கிறேன். சினிமா நடிகர் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். சினிமாவைக் கடவுளைப் போல மதிக்கிறேன். என் திரைப் பயணத்தில் எனக்கு எந்த விதமான பாலியல் தொல்லைகளும் ஏற்படவில்லை. அதே நேரம், மற்ற துறைகள் போலவே  திரைத்துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது” என்று  சமந்தா கூறினார். .

கார்ட்டூன் கேலரி