கனடா: மூன்று மகள்களை அநாதைகளாக்கி கொரோனாவில் உயிர் இழந்த தமிழ் தம்பதி

பிராம்ப்டன், கனடா

னடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர்.

கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரம்  அந்நாட்டின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகும்.  இந்நகரில் அமைந்துள்ள கேட் குழுமம் என்னும் வர்த்தக குழும நிறுவனங்களில் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த தமிழரான நாகராஜா தேசிங்கராஜா என்பவர் பணி புரிந்து வந்தார்.  இவருடைய மனைவி பெயர் புஷ்பராணி நாகராஜா என்பதாகும்.

இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.  திருமணமாகி சுமார் 30 ஆண்டுகளைத் தாண்டி உள்ள நாகராஜா தம்பதியருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி அவர்கள் குடும்பத்தினருடன் பரிசோதனை செய்துக் கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது.

நாகராஜா மற்றும் புஷ்பராணியின்  உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுல்ளனர்.  மகள்கள் மூவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனிமையில் வைக்கபட்டுள்ளன்ர்.  இந்நிலையில் புஷ்பராணி க்டந்த் 13 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.

 மனைவியை விட்டு பிரியாத நாகராஜா அவர் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்தார்.  இரு தினங்களில்  அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 15 ஆம் தேதி அன்று நாகராஜா உயிர் இழந்தார்.  மறைந்த நாகராஜா பகுதி நேரப் பணியாக கனடா நாட்டின் தமிழ் பத்திரிகையான உதயன் என்னும் பத்திரிகையில் பணி புரிந்ததுடன் அந்நாட்டில் பல சமூகப் பணிகளும் ஆன்மிகப் பணிகளும் செய்துள்ளார்.