தமிழ் வளர்ச்சி விருதுகள்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை:

மிழக அரசின்  2019- ஆம் ஆண்டுக்கான  தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

.தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் 2019ஆம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக வளர்ச்சித் துறை சார்பில் விருதுகளுடன் ரூ.1 லட்சம் பணமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் பட்டியல் பின்வருமாறு…

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.

கபிலர் விருது-புலவர் வெற்றியழகன்,
உ.வே.சா.விருது-வே.மகாதேவன்,
கம்பர் விருது-சரசுவதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது – முனைவர் கவிதாசன்
ஜி.யு.போப் விருது – மரிய ஜோசப் சேவியர்
மறைமலை அடிகளார் விருது – முத்துக்குமாரசாமி
முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது – நாகராசன்
அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து
மொழி பெயர்ப்பாளர் விருது – மாலன்
இளங்கோவடிகள் விருது – கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
உமறுப்புலவர் விருது -லியாகத் அலிகான்
மொழியியல் விருது – இலங்கை முனைவர் சுபதினி ரமேஷு
சிங்காரவேலன் விருது – அசோகா சுப்பிரமணியன்
அயோத்திதாஸப் பண்டிதர் விருது – புலவர் பிரபாகரன்

சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள்- முகமது யூசுப், மஸ்தான் அலி, பேராசிரியர்.சிவ. முருகேசன்,

2018- ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது முனைவர் நாகராசனுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகளுடன் ரூபாய் 1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி