“தமிழ் நாய்களே! பறையன்களே! கொன்றுவிடுவோம்!” : சிங்கள துறவியின் கொலை மிரட்டல்

மட்டக்களப்பு:

லங்கையில், தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1

இலங்கையில், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர் குடியிருப்புகளை அகற்றும் பணி மிக மெதுவாக நடந்துவருகிறது. அப்படியோர் நடவடிக்கையில் ஈடுபட்ட (தமிழ்) கிராம சேவகரை, புத்த துறவி ஒருவர் ஆபாசமாகவும், கடுமையாகவும் மிரட்டினார். நேற்று நடந்த சம்பவம் இது.

மட்டக்களப்பில்  அம்பிடிவ் சுமானா என்ற புத்த துறவிதான், தமிழ் சேவகரை இப்டி மிரட்டியிருக்கிறார்.

” விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உன்னைப் பார்க்கும் பொழுது என் ரத்தம் கொதிக்கிறது. நீ ஒரு தமிழ் நாய்!  பறையன்களே! நீங்கள் சிங்களர்களுக்கு எதிராக தொடுக்கும் வழக்குகளை நிறுத்த வேண்டும்.

2

ஒரு சிங்களர்களரையேனும் அவர்களது இடத்திலிருந்து அனுப்ப நினைத்தாலும் உங்களை கொன்று விடுவேன்.  இது தமிழ் நாய்களான உங்கள் அனைவருக்கும் எனது கடைசி எச்சரிக்கை” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பலரும் பார்க்க, பொது இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அருகில் இருக்கும் காவல் அதிகாரிகள் புத்த துறவியை மென்மையாக தடுக்கிறார்கள். அதை பொருட்படுத்தாமல் புத்த துறவி ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். சுற்றிலும் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுக்கிறார்கள். ஆனாலும் தனது ஆவேசப்பேச்சை தொடர்கிறார் புத்த துறவி.

ஏற்கெனெவே புத்த துறவிகள், தமிழ் மக்களுக்கு எதிரான பல கொடும் செயலைச் செய்திருக்கிறார்கள். இந்த புத்த துறவியின் பேச்சும்,தனிப்பட்ட நபரின் ஆத்திரமாகத் தெரியவில்லை.

புத்த துறவி பேசியதன் ஆரடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புத்ததுறவியின் முழு பேச்சு:

“வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா..

ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. போங்கோ..

பறையன்களே… நீ புலிடா… புலிடா…

நீ புலியே தான்ரா… சிங்களவன அண்டைக்கு சுட்ட…

இண்டைக்க அடிக்கிற நீ அதைத் தான்ரா செய்யிற…

உன்னைப் பாக்கும்போது எரிச்சல் வருது..

இந்த நாய்தான் தொடர்ந்து வழக்கு போட்டது…

நீ கிராம சேவகர் எண்டத நினைச்சிக்கொள்… நீ தமிழன்…

நீ சிங்களவனுக்கு எதிரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு..

உனக்கு நல்லபடியா சொல்றன்…

ஒரு சிங்களவனையும் ஒரு இடத்திலயிருந்து அசைச்சாலும் ……….

தம்பிய (முஸ்லிம் ) நீதிமன்றமும் முடிந்துவிட்டது.

தமிழனின் நீதிமன்றமும் முடியும்…

நீ நல்லா நினைவு வச்சிக்கொள்… உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கிடுவேன்…

நான் பொறுமையா இருக்கிறன் ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக்காகத்தான்.

அதை நீ நினைவு வச்சிக்கொள் பறையா….தமிழா…

இவனுக்கும் சொல்லனும் (பொலிஸிற்கு )……..

(கிராம சேவையாளருக்கு) நீ சிங்களவன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட

ஏன் உன்ர அப்பாவின் இடமா? அம்மாவின் இடமா?…

டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி செய்யாத…

நீ புலியாகி சுட்ட…. நாங்க பொறுமையா இருந்தோம்….

(கெட்டவார்த்தை)

திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு (கெட்டவார்த்ததை) மகனுக்கும் (கெட்டவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசிகாலம்தான்

உங்களுக்கு….அடிப்பேண்டா…ம்ம்ம்….இவன் சாகும் வரைக்கும்….!”

இந்த  வீடியோ காட்சி: