சென்னை,

மிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்)  3 ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும்  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, வாக்காளர் வரைவுப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.  மாநிலம் முழுவதும் அந்தந்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில்  தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில, ஆண்கள்-2,94,84,492 என்றும் பெண்கள் 3,00,98,268 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 24,405 வாக்காளர்கள் உள்ளனர். அதில் அதிகம் பெண் வாக்காளர்கள் (3,10,542) உள்ள தொகுதியாக சோழிங்கநல்லூர் விளங்குகிறது.

மேலும் தமிழ்நாட்டிலேயே கீழ்வேளூர் குறைந்த வாக்காளர்கள் (1,68,275,) உள்ள தொகுதியாக விளங்குகிறது.

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் வெளியிட்டார்.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் 40 லட்சத்து 73 ஆயிரத்து 703 வாக்களர்கள் உள்ளனர்.

குறைந்த பட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் 102 வாக்காளர்களும், அதிக பட்சமாக வேளச்சேரியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்களும் இருக்கின்றனர்.ங

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 86 ஆயிரத்து 344 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 20 லட்சத்து 13 ஆயிரத்து 168 பேரும், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேரும், இதர வாக்காளர்கள் 978 பேரும் உள்ளனர்.