பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘சீறும் புலி’’….!

தமிழ் ஈழ விடுதலைக்காக ‘விடுதலைப் புலிகள்’ என்ற அமைப்பை நிறுவியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

ஆனால் 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போர் செய்த மறைந்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சீறும் புலி’ என்ற திரைப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

ஜி.வெங்கடேஷ் குமார் ‘சீறும் புலி’ படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோஸ் 18 நிறுவனம் தயாரிக்கும் ‘சீறும் புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.