டில்லியில் ‘மண்சோறு’ சாப்பிட்டு தமிழக விவசாயிகள் போராட்டம்! பிரேமலதா பங்கேற்பு

டில்லி,

டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் இன்று 29வதுநாளாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா சந்தித்து அவர்களுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு ஆதரவு தெரிவித்தார்.

தமிழகத்தில்  வறட்சி காரணமாக  400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன்  என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முழு நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய விவசாயிகள் இன்று, மன்சோறு சாப்பிட்டு போராடி வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர்களுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு ஆதரவு தெரிவித்தார்.