டிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்கு குணம் அடைந்து வீடு திரும்பினர்.


இந்நிலையில் வங்காள மொழி பட பிரபல இயக்குனர் பிரபல ராஜ் சக்கரவர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளார். அவர் கூறும்போது, ’என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். தற்போது நான் கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்கான சிகிச்சை பெறுகிறேன். இனி குடும்பத் தினர் அனைவரும் சோதனை செய்ய உள்ளோம்’ என தெரிவிதுள்ளார்.
கொரோனா தொற்றால் ஏற்கனவே இயக்கு னர் எஸ் எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜ் சக்ரவர்த்தி, சென்னை 28, கோ, பொல்லா தவன் சிங்கம், காதல் போன்ற படங்களை வங்காள மொழியில் ரீமேக் செய்துள்ளார்’
சில படங்களில் ராஜ் சக்ரவர்த்தி நடித்திருப்பதுடன், தயாரித்தும் இருக்கி றார்.