பாரதிராஜாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு.. பதிவு துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டது..

டைரக்டர் பாரதிராஜா சில நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில். தனது தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது அது முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்கம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாரதிராஜாவுடன் ஒரு சிலரும் சேர்ந்து 03. 08. 2020 அன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப் பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து மேற்படி சங்கத்தை பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளதாக வும் தினசரி பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி களிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி தங்களால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி சங்கத்தின் பொறுப்பை ஏற்று சங்கத்தை நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் மாவட்ட பதிவாளரால் இந்த நிர்வாகத்துக்கு ஆலோசனை கூற பாரதிராஜா, டிஜி தியாகராஜன், டி சிவா உட்பட 9 பேர் நியமிக்கப் பட்டார்கள் அவர்களும் ஓராண்டு சங்க அலுவலகத் தில் அமர்ந்து சிறப்பு அதிகாரிக்கு ஆலோசனை களை சொல்லி வந்தார்கள்.
இந்த நிலையில் சில தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் அட்டவணை அறிவித்து தேர்தல் வேலைகளை தொடங்கினார். எதிர்பாராத விதமாக கொரோனா பெரும் தொற்று வந்ததால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து சங்க வேலைகளை சிறப்பு அதிகாரி சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழக அரசு அறிவித்து தங்களால் நியமிக்கப் பட்ட சிறப்பு அதிகாரி சரியாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி மேலே குறிப்பிட்ட பாரதிராஜா உள்பட சிலர் தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்கத்திற்கு விரோதமாக புதிய சங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது சங்க விதிப்படி விரோத நடவடிக்கையாகும் ஆகவே பாரதிராஜா மற்றும் அவருக்கு துணையாக உள்ளவர்களையும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.