தனது பாதுகாவலரின் குழந்தையை தடுத்தெடுத்த தமிழ் நீதிபதி!

--
நீதிபதி இளஞ்செழியன்

இலங்கை,

னது உயிரைக்காப்பாற்றிய மெய்க்காப்பாளரின் குழந்தையை தத்தெடுத்துள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் நீதிபதிகுகு  சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இலங்கையில் கடந்த வாரம், யாழ்ப்பாணம் நகரில் தமிழ் நீதிபதியான இளஞ்செழியன் மீது  மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அவரது உயிரை காப்பாற்றிய மெய்ககாப்பாளர் தனது உயிரை பறிகொடுத்தார்.

இலங்கை  யாழ்ப்பாணம் நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்பு பணியில் இருந்த  போலீஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திர சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் தனது வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே என்று நினைத்த, ஹேமச்சந்திரவின் மனைவி, நீதிபதியின் காலில் விழுந்து கதறினார்.

இந்நிலையில், உயிரிழந்த, தனது பாதுகாவலரின் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்வதாகவும், ஒரு தந்தையின் நிலையில் இருந்து அவர்களுக்கான கடமைகளை செய்யப் போவதாகவும், நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

மேலும்,  இறந்த சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு காவல்துறையில் பரிசோதகர் பணிக்கும் ஏற்பாடு செய்தார்.

தமிழ் நீதிபதி இளஞ்செழியனின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் மட்டு மல்லாது சிங்களர்களும்  பாராட்டி வருகின்றனர்.