சென்னை:
மிழ்மாநில கட்சித்தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்சங்கத் தலைவருமான பால்கனகராஜ் விரைவில் பாரதியஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரான ஆர்.சி. பால்கனகராஜ், தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில்  முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர் கடந்த 2014ம் ஆண்டு தமிழ்மாநில  கட்சி என்ற பெயரில் புதிய கட்சித் தொடங்கி தேர்தலில் போட்யிட்டார். இதன் தலைமைகயம் வேப்பேரியில் உள்ளது. சில தேர்தல்களில் போட்டியிட்டும் டெபாசிட் பெற முடியவில்லை.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.  அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதுபோல, ஜெ. மறைவுக்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, போட்டியிடாமல், தனது கட்சி  ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், தற்போது தனது கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு பாஜகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் முருகனை  சந்தித்து விரைவில்  கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாகவும், தமிழ் மாநில கட்சியை பாஜகவில் இணைத்து கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.