10ம் வகுப்பு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியானது…

சென்னை:

மிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு இணையதளங்களில் இன்று வெளியானது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது தேர்ச்சியை  மற்றும் மதிப்பெண் குறித்து அறிந்து வருகின்ற னர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யப்பட்டு, ஏர்கனவே நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி செய்வதாக அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையில்,  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அதையொட்டி, இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டன.

ஏற்கனவே தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி இன்று (திங்கட் கிழமை) காலை 9.30 மணிக்கு  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே போல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

 

You may have missed